மொபைல்ஸ்

பட்ஜெட் பிரிவில் 7,000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்... ரியல்மி அசத்தல் சம்பவம்?

Published On 2025-11-09 12:32 IST   |   Update On 2025-11-09 12:32:00 IST
  • ரியல்மி C85 ஸ்மார்ட்போனில் 144Hz ரிப்ரெஷ் ரேட், 1,200 nits பீக் பிரைட்னஸ் உடன் 6.8-இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.
  • 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6.5W ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் அடுத்தடுத்து புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. வருகிற நவம்பர் 20ஆம் தேதி ரியல்மி GT 8 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகப்படுத்த ரியல்மி தயாராகி வருகிறது. இந்த நிலையில், ரியல்மி நிறுவனம் பட்ஜெட் பிரிவில் புதிய ஸ்மார்ட்போனினையும் அறிமுகம் செய்யலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி C85 என்ற பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரூ.12,999 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி C75 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும். ரியல்மி C85 ஸ்மார்ட்போனில் அசத்தலான கேமரா சென்சார்களை தவிர்த்து, சற்றே குறைந்த திறன் கொண்ட சென்சார்களுடன் வரலாம் என்று டிப்ஸ்டர் கூறுகிறார்.

ரியல்மி நிறுவனம் C85 ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. ஆனால் அது வியட்நாமில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வரிசையில், இந்த பட்ஜெட் சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம். மேலும், வியட்நாமில் ரியல்மி 15x மற்றும் ரியல்மி C85 ஆகியவை முன்பக்க கேமராவை தவிர ஒரே மாதிரியான அம்சங்களை பகிர்ந்து கொள்கின்றன.



ரியல்மி C85 அம்சங்கள்:

ரியல்மி C85 ஸ்மார்ட்போனில் 144Hz ரிப்ரெஷ் ரேட், 1,200 nits பீக் பிரைட்னஸ் உடன் 6.8-இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இது பட்ஜெட் பிரிவில் அரிதான ஒன்றாகும். இது சாதாரணமாகவும், கேமிங்கின் போதும் மென்மையான ஸ்கிராலிங் அனுபவத்தை வழங்கும். ரியல்மி C85 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் அதன் 7,000mAh பேட்டரி ஆகும். இது இந்தப் பிரிவில் மிகப்பெரிய ஒன்றாகும்.

இந்த ஸ்மார்ட்போன் அதன் முந்தைய வெர்ஷனை போன்றே ரூ.12,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டால், 7,000mAh பேட்டரியுடன் கூடிய மிகவும் மலிவு விலை ஸ்மார்ட்போனாக ரியல்மி C85 இருக்கும். இதனுடன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6.5W ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.

வியட்நாமில் ரியல்மி C85 ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட் கொண்டிருக்கிறது. புகைப்படங்கள் எடுப்பதற்கு, பின்புறத்தில் 50MP பிரைமரி கேமராவும், முன்பக்கத்தில் 8MP கேமராவும் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News