மொபைல்ஸ்

வேற லெவல் அம்சங்களுடன் ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போன் - விலை, அம்சங்கள் முழு விவரம்!

Published On 2025-08-22 12:51 IST   |   Update On 2025-08-22 12:51:00 IST
  • ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 பிரசஸரால் இயக்கப்படுகிறது.
  • 45W அதிவேக சார்ஜிங்குடன் 5800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 15 ப்ரோ சீரிசுடன் , சியோமி நிறுவனம் தனது ஸ்டான்டர்டு ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 120Hz ரிப்ரெஷ் ரேட் உடன் கூடிய 6.77-இன்ச் FHD+ OLED ஸ்கிரீன், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 7.35 மிமீ அளவில் மிக மெல்லிய டிசைன் கொண்டுள்ளது.

இத்துடன் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 பிரசஸரால் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம் கொண்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் மற்றும் 8MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் IP66 தரச்சான்று பெற்ற டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

மேலும், 45W அதிவேக சார்ஜிங்குடன் 5800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சியோமி ஹைப்பர் ஓஎஸ் 2 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.1, GPS + GLONASS, யுஎஸ்பி டைப் சி, NFC வழங்கப்பட்டுள்ளது.

புதிய ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஸ்கை புளூ மற்றும் ஸ்டார் ஒயிட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 12,145 (தோராயமாக) என தொடங்குகிறது.

Tags:    

Similar News