- சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போனின் புதிய மெமரி வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது.
- ஏற்கனவே ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன் 4 ஜிபி மற்றும் 6 ஜிபி என இருவித ரேம் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டது.
ரெட்மி நோட் 12 4ஜி, ரெட்மி 12C ஸ்மார்ட்போன்களின் வரிசையில், ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்ட புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், ரெட்மி நோட்12 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது மூன்றுவித மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கூடுதல் மெமரி தவிர புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போனின் அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
விலையை பொருத்தவரை ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 21 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 12 5ஜி மாடலில் 6.67 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 13MP செல்ஃபி கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 13 ஒஎஸ் கொண்டிருக்கும் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்ட்ராய்டு ஒஎஸ் அப்டேட்கள், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட இருக்கிறது.
ரெட்மி நோட் 12 5ஜி அம்சங்கள்:
6.67 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர்
அட்ரினோ GPU
4 ஜிபி, 6 ஜிபி LPDDR4X ரேம்
128 ஜிபி UFS 2.2 மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 13
ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
48MP பிரைமரி கேமரா
8MP அல்ட்ரா வைடு கேமரா
2MP மேக்ரோ கேமரா
13MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக்
டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்