மொபைல்ஸ்

ரெட்மி நோட் ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு - எவ்வளவு தெரியுமா?

Published On 2022-12-02 04:11 GMT   |   Update On 2022-12-02 04:11 GMT
  • சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
  • இந்தியாவில் சியோமியின் ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

தற்போதைய விலை குறைப்பு ஸ்மார்ட்போனின் மூன்று வேரியண்ட்களுக்கும் பொருந்தும். மேலும் குறைக்கப்பட்ட புதிய விலை சியோமி இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது. அதன்படி ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனின் புதிய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ரெட்மி நோட் 11 புதிய விலை விவரங்கள்:

ரெட்மி நோட் 11 (4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி) மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999

ரெட்மி நோட் 11 (6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி) மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 499

ரெட்மி நோட் 11 (6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி) மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999

அதன்படி ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி வேரியண்ட் விலை ரூ. 500, மற்ற இரு வேரியண்ட்களின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் ஹாரிசான் புளூ, ஸ்பேஸ் பிளாக் மற்றும் ஸ்டார்பர்ஸ்ட் வைட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

விலை குறைப்பு மட்டுமின்றி ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி பெறலாம். இத்துடன் பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்து ரூ. 16 ஆயிரத்து 500 வரை தள்ளுபடி பெற முடியும். இத்துடன் இரண்டு மாதங்களுக்கு யூடியூப் பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

ரெட்மி நோட் 11 அம்சங்கள்:

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2MP டெப்த், 2MP மேக்ரோ கேமரா, 13MP செல்ஃபி கேமரா, IP53 தரச் சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

Tags:    

Similar News