மொபைல்ஸ்

விரைவில் இந்தியா வருகிறது புது K சீரிஸ் ஸ்மார்ட்போன்... விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2022-06-13 04:14 GMT   |   Update On 2022-06-13 04:14 GMT
  • ரெட்மி K சீரிஸ் ஸ்மார்ட்போன் ஒன்று விரைவில் இந்தியாவுக்கு வருகிறது.
  • இது ரெட்மி நோட் 11 ப்ரோ மாடலின் ரீ பிராண்டட் வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.

ரெட்மியின் K சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் உலகளவில் 3 மாடல்களுக்கு மேல் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இந்தியாவில் K20 என்கிற ஒரு மாடல் மட்டுமே வெளியிடப்பட்டது. இந்தியாவில் K சீரிஸ் போன்கள் அதிகளவில் வெளியிடப்படாததற்கு முக்கிய காரணம் அதன் விலை அதிகமாக இருப்பது தான்.


இந்நிலையில் தற்போது மீண்டும் K சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அந்த வகையில் ரெட்மி K50i 5ஜி என்கிற ஸ்மார்ட்போன் தான் விரைவில் இந்தியாவுக்கு வருகிறது. இது ரெட்மி நோட் 11 புரோ மாடலின் ரீ பிராண்டட் வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், பின்புறம் டிரிபிள் கேமரா செட் அப், 5080 mAh பேட்டரி, 67W பாஸ்ட் சார்ஜிங் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News