மொபைல்ஸ்

ரெட்மி A2 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

Update: 2023-05-12 10:11 GMT
  • ரெட்மி பிராண்டின் புதிய பட்ஜட் ரக ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.
  • புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை ஒட்டி சியோமி நிறுவனம் பரிசு போட்டியை நடத்தி வருகிறது.

சியோமி நிறுவனம் விரைவில் தனது புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் மே 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி A2 பெயரில் விறப்னை செய்யப்பட இருக்கிறது.

முன்னதாக ரெட்மி A2 மற்றும் A2 பிளஸ் மாடல்கள் மார்ச் மாதம் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ரெட்மி A2 பிளஸ் மாடலும் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ரெட்மி A2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் மே 19 ஆம் தேதி காலை 11 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டுடன் சியோமி நிறுவனம் பரிசு போட்டியை நடத்தி வருகிறது. இதில் கலந்து கொண்டு பயனர்கள் சிறப்பு பரிசை வெல்ல முடியும்.

ரெட்மி A2 அம்சங்கள்:

6.52 இன்ச் LCD டிஸ்ப்ளே, 720x1600 பிக்சல் ரெசல்யூஷன்

மீடியாடெக் ஹீலியோ G36 பிராசஸர்

2 ஜிபி, 3 ஜிபி ரேம்

32 ஜிபி மெமரி

ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன்

8MP பிரைமரி கேமரா

QVGA இரண்டாவது கேமரா

5MP செல்ஃபி கேமரா

டூயல் சிம் ஸ்லாட்

4ஜி, வைபை, ப்ளூடூத்

மைக்ரோ யுஎஸ்பி போர்ட்

5000 எம்ஏஹெச் பேட்டரி

Tags:    

Similar News