மொபைல்ஸ்
null

விரைவில் வெளியாகும் புது ரெட்மி ஸ்மார்ட்போன்

Published On 2022-12-07 09:40 IST   |   Update On 2022-12-07 09:40:00 IST
  • சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் சீரிஸ் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
  • புதிய ரெட்மி 12C ஸ்மார்ட்போன் டூயல் பேண்ட் வைபை மற்றும் எல்டிஇ கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது.

ரெட்மி பிராண்டு புதிய எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2212ARNC4L எனும் மாடல் நம்பர் கொண்ட புது ரெட்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் IMEI டேட்டாபேஸ் தளத்தில் ரெட்மி 12C பெயரில் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு FCC ஏற்கனவே அனுமதி வழங்கி விட்டது. அந்த வகையில் ரெட்மி 12C மாடல் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

புதிய ரெட்மி 12C மாடலில் 6.7 இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளே, 2 ஜிபி, 4 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம், 32 ஜிபி, 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் டிசைன் TENAA வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது. அதன்படி ரெட்மி 12C மாடலில் டிராப் நாட்ச் பேனல், மூன்று கேமரா சென்சார்கள், எல்இடி ஃபிளாஷ் கைரேகை சென்சார் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.

எண்ட்ரி லெவல் மாடல் என்பதால், ரெட்மி 12C மாடல் முதற்கட்டமாக சர்வதேச சந்தையிலும், அதன் பின் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13 ஒஎஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இது மட்டுமின்றுி ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி வேரியண்ட் விவரங்களும் IMEI டேட்டாபேஸ் தளத்தில் லீக் ஆகி இருக்கிறது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போனும் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இது ரெட்மி நோட் 10 ப்ரோ மாடலின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ரெட்மி நோட் 12 ப்ரோ 4ஜி மாடல் sweet_k6a_global எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது.

Tags:    

Similar News