மொபைல்ஸ்
null

துவக்கத்திலேயே இரண்டு லட்சம் யூனிட்கள் - விற்பனையில் அசத்தும் ரியல்மி 10 ப்ரோ சீரிஸ்!

Update: 2022-11-25 04:16 GMT
  • ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • இந்திய வெளியீட்டின் போதே இந்த ஸ்மார்ட்போன்களின் சர்வதேச வெளியீடும் நடைபெற உள்ளது.

ரியல்மி நிறுவனம் சீன சந்தையில் ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. இதில் ரியல்மி 10 ப்ரோ மற்றும் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இரு ஸ்மார்ட்போன்களின் விற்பனை நேற்று (நவம்பர் 24) சீன சந்தையில் நடைபெற்றது. விற்பனை துவங்கிய சிறிது நேரத்திலியே புதிய ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் மாடல்கள் இரண்டு லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்கப்பட்டதகாக ரியல்மி அறிவித்து இருக்கிறது.

இரண்டு லட்சம் யூனிட்கள் மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இரு ஸ்மார்ட்போன்களும் சரியாக எத்தனை யூனிட்கள் விற்பனையாகின என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளது. ரியல்மி 10 ப்ரோ மற்றும் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடல்கள் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடல் மட்டும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஆப்ஷனில் கிடைக்கிறது.

இரு ஸ்மார்ட்போன்களும் ரியல்மி 9 ப்ரோ மற்றும் ரியல்மி 9 ப்ரோ பிளஸ் மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் ரியல்மி 9 ப்ரோ பிளஸ் மாடலில் வளைந்த டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் விற்பனையில் அசத்தி வரும் நிலையில், இதன் சர்வதேச வெளியீடு பற்றிய அறிவிப்பும் நேற்றே வெளியாகி விட்டது. மேலும் சர்வதேச வெளியீட்டின் போதே இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிலும் அறிமுகமாகின்றன.

அம்சங்களை பொருத்தவரை ரியல்மி 10 ப்ரோ மாடலில் LCD ஃபிளாட் டிஸ்ப்ளே, ப்ரோ பிளஸ் மாடலில் வளைந்த எட்ஜ்கள், OLED பேனல், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் மாடல்களில் கிரேடியண்ட் பேக் பேனல் டிசைன், இரு கேமரா சென்சார்கள், 108MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ் கொண்டிருக்கின்றன. ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடலில் 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் உள்ளது.

ரியல்மி 10 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், ப்ரோ பிளஸ் மாடலில் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி ப்ரோ மாடலில் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், ப்ரோ பிளஸ் மாடலில் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

Tags:    

Similar News