மொபைல்ஸ்

7000mAh பேட்டரி, டூயல் சிப் சிஸ்டம்... பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகும் புது ஸ்மார்ட்போன்

Published On 2025-08-19 13:39 IST   |   Update On 2025-08-19 13:39:00 IST
  • புதிய P4 5G ஸ்மார்ட்போன் 7000mAh டைட்டன் பேட்டரியால் இயக்கப்படுகிறது.
  • ஸ்மார்ட்போனை 25 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்துவிடும்.

ரியல்மி நிறுவனம் தனது P4 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை நாளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், ரியல்மி இந்தியாவின் தலைமை அதிகாரி பிரான்சிஸ் வோங், புதிய ஸ்மார்ட்போனின் விலை ரூ. 17,499 இல் இருந்து தொடங்கும் என்று அறிவித்து இருக்கிறார்.

முன்னதாக ரியல்மி P3 5G ஸ்மார்ட்போன் ரூ. 16,999 இல் தொடங்கியது. மேலும் ரூ. 2000 வங்கி சலுகையுடன் ரூ. 14,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

புதிய ரியல்மி P4 மாடல் இரட்டை-சிப்செட் கட்டமைப்பையும் கொண்டிருக்கும். இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 7400 அல்ட்ரா 5ஜி பிராசஸர் (SoC) மற்றும் பிரத்யேக பிக்சல்வொர்க்ஸ் விஷுவல் ப்ராசஸரை ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போனில் 6.77-இன்ச் FHD+ 144Hz HyperGlow AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

புதிய P4 5G ஸ்மார்ட்போன் 7000mAh டைட்டன் பேட்டரியால் இயக்கப்படுகிறது. இத்துடன் 80W அல்ட்ரா சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது ஸ்மார்ட்போனை 25 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்துவிடும். இந்த ஸ்மார்ட்போன் AI ஸ்மார்ட் சார்ஜிங், கேமிங்கிற்கான பைபாஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் போன்ற அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

ரியல்மி P4 5G ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைடு லென்ஸ் மற்றும் 16MP IMX480 செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

புதிய ரியல்மி P4 ஸ்மார்ட்போன்: ஸ்டீல் கிரே, எஞ்சின் புளூ மற்றும் ஃபோர்ஜ் ரெட் என மூன்று வண்ண வகைகளில் வழங்கப்படும். இது IP65 + IP66 தரச் சான்று பெற்ற டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் வருகிறது.

நாளை (ஆகஸ்ட் 20) இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ரியல்மி P4 சீரிஸ் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா வலைதளங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.

Tags:    

Similar News