மொபைல்ஸ்

முற்றிலும் புதிய GT நியோ 3T ஆகஸ்ட் வெளியீட்டை உறுதிப்படுத்திய ரியல்மி

Published On 2022-08-19 04:08 GMT   |   Update On 2022-08-19 04:08 GMT
  • ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • தற்போது இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி அந்நிறுவன சிஇஒ புது தகவலை தெரிவித்து இருக்கிறார்.

ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஆகஸ்ட் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படும் என ரிய்லமி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரபிவித்து இருக்கிறார். ரியல்மி 9i ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து புதிய GT நியோ 3T ஸ்மார்ட்போனிற்கான டீசரை ரியல்மி வெளியிட்டு இருந்தது.

ஜூன் மாதத்தில் இருந்தே ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இரு மாதங்களாக அவ்வப்போது டீசர்கள் மட்டும் வெளியிடப்பட்டு வரும் நிலையில், இந்த ஸ்மார்ட்போனிற்கான வெளியீட்டு தேதி மட்டும் இதுவரை அறிவிக்கப்படாமலேயே உள்ளது.


முன்னதாக ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் இந்தோனேசியா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி Q5 ப்ரோ மாடலின் ரிபிராண்ட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.

அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.62 இன்ச் FHD+120Hz AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், LPDDR5 ரேம், UFS 3.1 மெமரி, ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் பாஸ்ட் வயர்டு சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP லென்ஸ், 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இவற்றுடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார், 5ஜி, வைபை 6. ப்ளூடூத் 5ய2, என்எப்சி மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News