மொபைல்ஸ்

விரைவில் இந்தியா வரும் கோகோ கோலா போன் - அசத்தல் டீசர் வெளியிட்ட ரியல்மி

Update: 2023-01-27 10:09 GMT
  • ரியல்மி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் மாடலுக்கான டீசர் வெளியாகி இருக்கிறது.
  • இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் சில நாட்களுக்கு முன் இணையத்தில் லீக் ஆகி இருந்தது.

ரியல்மி இந்தியா நிறுவனம் தனது வலைதளம் மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் புது அறிவிப்பை உணர்த்தும் டீசர்களை வெளியிட்டு இருக்கிறது. அதில், "Something exiting is Bubbling" மற்றும் "realme is set to get really refreshing" எனும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

புது டீசர்களின் படி ரியல்மி நிறுவனம் கோகோ கோலா ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என்பதை உணர்த்தும் வகையில் இடம்பெற்று இருக்கிறது. வரும் வாரங்களில் இந்த ஸ்மார்ட்போன் ஸ்பெஷல் எடிஷன் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர டுவிட்டரில் கோகோ கோலா போன் படம் கொண்ட அக்கவுண்ட் ஒன்று கோலா போன் குளோபல் (@colaphoneglobal) பெயரில் துவங்கப்பட்டு இருக்கிறது.

குளிர்பான நிறுவனங்களுடன் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் கூட்டணி அமைப்பது முதல் முறை இல்லை. முன்னதாக 2015 வாக்கில் பெப்சி போன் P1s மாடலை ஷென்சென் ஸ்கூபி கம்யுனிகேஷன் எக்யுப்மெண்ட் கோ லிமிடெட் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஏற்கனவே வெளியான தகவல்களின் படி ரியல்மி 10 கோகோ கோலா எடிஷன் ஸ்மார்ட்போன் மாடல் புதிதாக சிவப்பு நிறம் மற்றும் கோகோ கோலா பிராண்டிங்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பெரும்பாலும் ரியல்மி 10 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

ரியல்மி 10 மாடலில் 6.4 இன்ச் FHD+ 90Hz AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. புது ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.

Tags:    

Similar News