மொபைல்ஸ்

பட்ஜெட் விலையில் புது 5ஜி போன் அறிமுகம் செய்த ரியல்மி

Published On 2022-08-18 09:13 GMT   |   Update On 2022-08-18 09:13 GMT
  • ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
  • இந்த ஸ்மார்ட்போன் 90Hz ரிப்ரெஷ் ரேட், 90.5 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது.

ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனத்தின் புதுவரவு 5ஜி போன் ஆகும். இதில் 6.6 இன்ச் FHD+LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர், 6 ஜிபி ரேம், டைனமிக் ரேம் எக்ஸ்பான்ஷன் தொழில்நுட்பம் மூலம் 5ஜிபி வரை கூடுதல் ரேம் வழங்குகிறது. இந்த போனில் ஏராளமான 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்யும் வசதி, ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யுஐ 3.0 வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP பிளாக் அண்ட் வைட் கேமரா, 2MP 4செ.மீ. மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. மேலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.


ரியல்மி 9i 5ஜி அம்சங்கள்:

6.6 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர்

மாலி-G57 MC2 GPU

4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி (UFS 2.2) மெமரி

6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

டூயல் சிம் ஸ்லாட்

ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யுஐ 3.0

50MP பிரைமிரி கேமரா, f/1.8, LED பிளாஷ்

2MP B&W மற்றும் 2MP 4cm மேக்ரோ, f/2.4

8MP செல்பி கேமரா, f/2.0

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.1

யுஎஸ்பி டைப் சி

5000 எம்ஏஹெச் பேட்டரி

18 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போன் சோல்புல் புளூ, ராக்கிங் பிளாக் மற்றும் மெட்டாலிக்கா கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதன் விற்பனை ரியல்மி, ப்ளிப்கார்ட் போன்ற வலைதளங்களில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News