மொபைல்ஸ்

ஏகப்பட்ட சலுகைகளுடன் விற்பனைக்கு வந்த ரியல்மி 12 ப்ரோ சீரிஸ்

Published On 2024-02-06 09:13 GMT   |   Update On 2024-02-06 09:13 GMT
  • ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான முன்பதிவும் துவங்கியது.
  • ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ஏராளமான சலுகைகள் அறிவிப்பு.

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 12 ப்ரோ மற்றும் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. மேலும், அறிமுகத்தின் போதே, புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான முன்பதிவும் துவங்கியது. இந்த வரிசையில், ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை துவங்கியுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரியல்மி 12 ப்ரோ மற்றும் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சப்மரைன் புளூ மற்றும் நேவிகேட்டர் பெய்க் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

 


விலையை பொருத்தவரை ரியல்மி 12 ப்ரோ 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 25 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 26 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ரியல்மி 12 ப்ரோ பிளஸ் மாடலின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மாடல் விலை ரூ. 31 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

 


அறிமுக சலுகைகள்:

ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ரியல்மி, ப்ளிப்கார்ட் வலைதளத்தில் வாங்குவோருக்கு 12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 2 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது.

ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் வாங்குவோருக்கு ரூ. 2 ஆயிரம் வரை கேஷ்பேக், எக்சேன்ஜ் சலுகையின் கீழ் ரூ. 4 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் வாங்கும் போது ரூ. 2 ஆயிரம் வரையிலான சலுகையும், 12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகையும் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News