மொபைல்ஸ்

விரைவில் அறிமுகமாகும் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்

Update: 2023-03-14 05:20 GMT
  • ரியல்மி நிறுவனத்தின் புதிய 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் டிமென்சிட்டி 810 பிராசஸர் கொண்டிருக்கிறது.
  • புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்க இருக்கிறது.

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 10 சீரிசில் ரியல்மி 10 ப்ரோ 5ஜி, ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி மற்றும் ரியல்மி 10 ப்ரோ 5ஜி கோகோ கோலா எடிஷன் போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த வரிசையில் ரியல்மி 10T ஸ்மார்ட்போன் இணைய இருப்பதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

அதன்படி ரியல்மி 10T 5ஜி ஸ்மார்ட்போன் மார்ச் 21 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ரியல்மி 10T 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர், அதிகபட்சம் 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. 90Hz ரிப்ரெஷ் ரேட், புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா போன்ற அம்சங்கள் இதில் வழங்கப்படுகிறது.

 

இவைதவிர புதிய ரியல்மி 10T 5ஜி ஸ்மார்ட்போன் பற்றி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. ரியல்மி 10T 5ஜி ஸ்மார்ட்போன் RMX3612 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதே மாடல் நம்பர் ரியல்மி 9i 5ஜி மாடலுக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் ரியல்மி 9i 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தோற்றத்தில் ரியல்மி 10T 5ஜி ஸ்மார்ட்போன் ரியல்மி 9i 5ஜி போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. அந்த வகையில், ரியல்மி 10T ஸ்மார்ட்போன் ரியல்மி 95 மாடலின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது.

அம்சங்களை பொருத்தவரை ரியல்மி 9i 5ஜி மாடலில் 6.6 இன்ச் IPS LCD FHD+ 90Hz ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ், ரியல்மி யுஐ 3.0 வழங்கப்படுகிறது. 

Tags:    

Similar News