மொபைல்ஸ்

விரைவில் இந்தியா வரும் போக்கோ M5 - வேற லெவல் டீசர் வெளியீடு!

Published On 2022-08-25 10:42 IST   |   Update On 2022-08-25 10:42:00 IST
  • போக்கோ நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
  • இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கும் என அதிகாரப்பூர்வ டீசரில் தெரியவந்துள்ளது.

போக்கோ நிறுவனம் விரைவில் தனது M சீரிஸ் மாடல்களை மாற்றியமைக்க இருக்கிறது. இந்திய சந்தையில் போக்கோ M5 4ஜி மாடலை அறிமுகம் செய்வதற்கான டீசரை அந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது. புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் டீசரில் G99 என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதை அடுத்து புதிய போக்கோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ G99 4ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளது.


எனினும், இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மற்ற போக்கோ M சாதனங்களை விட வித்தியாசமாக காட்சியளிக்கும் புது டிசைன் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

சிறப்பம்சங்களை பொருத்தவரை போக்கோ M5 4ஜி மாடலில் 6.58 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் எம்ஐயுஐ 12 ஒஎஸ் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி வரும் நாட்களில் அறிவிக்கப்பட்டு விடும்.

Tags:    

Similar News