மொபைல்ஸ்

வேற லெவல் பிராசஸருடன் உருவாகும் புதிய போக்கோ F5 - இணையத்தில் லீக் ஆன விவரங்கள்!

Published On 2023-04-19 10:11 GMT   |   Update On 2023-04-19 10:11 GMT
  • போக்கோ நிறுவனத்தின் புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
  • கீக்பென்ச் டெஸ்டிங்கில் போக்கோ F5 ஸ்மார்ட்போன் 4236 புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது.

போக்கோ நிறுவனத்தின் புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்: போக்கோ F5 மற்றும் போக்கோ F5 ப்ரோ மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. போக்கோ இந்தியா தலைவர் ஹிமான்ஷூ டாண்டன் புதிய போக்கோ F5 சீரிஸ் மாடல்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவித்து இருந்தார்.

மேலும் 23049PCD8I எனும் மாடல் நம்பர் கொண்ட போக்கோ ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த ஸ்மார்ட்போன் போக்கோ F5 இந்திய வேரியண்ட் ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் ஸ்மார்ட்போனின் செயல்திறன் மற்றும் ஹார்டுவேர் விவரங்களும் தெரியவந்துள்ளது.

 

கீக்பென்ச் 5 டேட்டாபேஸ்-இல் போக்கோ F5 ஸ்மார்ட்போன் 23049PCD8I எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோர் டெஸ்டிங்கில் 1118 புள்ளிகளையும், மல்டி கோரில் 4236 புள்ளிகளையும் பெற்று அசத்தி இருக்கிறது. கீக்பென்ச் தகவல்களின் படி போக்கோ F5 ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் பிராசஸர் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பிராசஸரில் ஒரு கோர் 2.92 ஜிகாஹெர்ட்ஸ்-லும், மூன்று கோர்கள் 2.50 ஜிகாஹெர்ட்ஸ்-லும், நான்கு கோர்கள் 1.80 ஜிகாஹெர்ட்ஸ்-ல் அதிவேகமாக இயங்கும் வகையில் கிளாக் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய போக்கோ F5 ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி புதிய போக்கோ ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI ஒஎஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த தகவல்களின் படி புதிய போக்கோ F5 ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 12 டர்போ மாடலின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது.

Photo Courtesy: Pricebaba

Tags:    

Similar News