மொபைல்ஸ்

கம்மி விலையில் புது ஸ்மார்ட்போனை களமிறக்கும் போக்கோ - இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

Published On 2022-06-06 04:14 GMT   |   Update On 2022-06-06 04:14 GMT
  • போக்கோ C40 எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் என்பதால், இதில் ஸ்னாப்டிராகன் அல்லது மீடியாடெக் எண்ட்ரி லெவல் பிராசஸர் மற்றும் LCD பேனல் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

போக்கோ நிறுவனம் வெளியிட உள்ள புது C சீரிஸ் ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அந்நிறுவனம் C40 என்கிற மாடலை வெளியிட உள்ளதாம். இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூன் 16ம் தேதி இந்தியாவில் வெளியிடப்பட உள்ளது.

போக்கோ C40 ஸ்மார்ட்போன் ரீ பிராண்ட் செய்யப்பட்ட ரெட்மி போனாக இருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி ரெட்மி 10C மாடலை போல் போக்கோ C40 மாடலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டிசைன் எக்ஸ்கிளூசிவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த போன் அந்நிறுவனத்தின் சிக்னேச்சர் கலரான மஞ்சள் நிறத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது.


இந்த ஸ்மார்ட்போன் 6000 mAH பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும் என்றும் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 11 இயங்குதளத்துடன் வரும் என கூறப்படுகிறது. மேலும் இது எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் என்பதால், இதில் ஸ்னாப்டிராகன் அல்லது மீடியாடெக் எண்ட்ரி லெவல் பிராசஸர் மற்றும் LCD பேனல் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

ரெட்மி 10C ஸ்மார்ட் போன் 6.7 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 13MP செல்பி கேமரா, 3GB ரேம், 32GB இண்டர்னல் மெமரி, 4GB ரேம், 64GB இண்டர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும், ஆதலால் போக்கோ C40 ஸ்மார்ட்போனிலும் இந்த அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News