மொபைல்ஸ்

7000mAh பேட்டரியுடன் வெறித்தனமாக ரெடியாகும் ஒப்போ ஸ்மார்ட்போன்

Published On 2025-08-12 13:37 IST   |   Update On 2025-08-12 13:37:00 IST
  • கைபேசியின் பேட்டரி 100W (வயர்டு) மற்றும் 50W (வயர்லெஸ்) வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது.
  • முன்பக்கத்தில், இது 32-மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.

ஒப்போ நிறுவனத்தின் ஃபைண்ட் X9 அல்ட்ரா அதன் முந்தைய வெர்ஷனான ஃபைண்ட் X8 அல்ட்ராவை விட அதிக திறன் கொண்ட இரட்டை செல் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்படும் என்று டிப்ஸ்டர் தெரிவித்துள்ளார். ஒப்போ நிறுவனம் இந்த ஆண்டு மாடலில் இந்த மேம்படுத்தலை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் மெலிதான டிசைனையும் தக்க வைத்துக் கொள்ளும்.

புதிய ஒப்போ ஃபைண்ட் X9 மற்றும் ஃபைண்ட் X9 ப்ரோ ஸ்மார்ட்போன்களுடன் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் நான்கு கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. சமீபத்திய தகவல்களின்படி, இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெய்போவில் வெளியிட்ட தகவல்களில், ஒப்போ ஸ்மார்ட்போன் இரண்டு 3,425mAh செல்களைக் கொண்ட இரட்டை செல் 7,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி 100W (வயர்டு) மற்றும் 50W (வயர்லெஸ்) ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது.

புதிய ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா அதன் முந்தைய ஸ்மார்ட்போனை போலவே ஒரு தட்டையான தோற்றத்தை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது SM8850 என்ற மாடல் நம்பர் கொண்ட பிராசஸர் மூலம் இயக்கப்படலாம். இது விரைவில் வெளியாக இருக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட் ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News