மொபைல்ஸ்

8 ஜிபி ரேம், 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் அறிமுகமான புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்

Update: 2023-05-15 10:00 GMT
  • ஒப்போ நிறுவனத்தின் புதிய F23 5ஜி ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது.
  • ஒப்போ F23 5ஜி மாடலில் 64MP பிரைமரி கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

ஒப்போ நிறுவனத்தின் புதிய F23 5ஜி ஸ்மார்ட்போன் மிட்-ரேஞ்ச் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் 6.72 இன்ச் FHD+LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8 ஜிபி விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர் ஒஎஸ் 13 வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனிற்கு நான்கு ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட், ஐந்து ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட உள்ளன. இந்த பிரிவு ஸ்மார்ட்போனில் இத்தனை அப்டேட்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை ஆகும்.

 

புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 2MP போர்டிரெயிட் கேமரா, 2MP மைக்ரோ லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஒப்போ குளோ டிசைன் கொண்டிருக்கும் F23 5ஜி ஸ்மார்ட்போன் கைரேகைகளை பதிய விடாத டிசைன் வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஒப்போ F23 5ஜி மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வங்கப்பட்டு இருக்கிறது.

 

ஒப்போ F23 5ஜி அம்சங்கள்:

6.72 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

அட்ரினோ 619L GPU

8 ஜிபி ரேம்

256 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர் ஒஎஸ் 13.1

ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

64MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிலாஷ்

2MP டெப்த் கேமரா

2MP மைக்ரோ லென்ஸ்

32MP செல்ஃபி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

3.5mm ஆடியோ ஜாக்

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

யுஎஸ்பி டைப் சி

5000 எம்ஏஹெச் பேட்டரி

67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ஒப்போ F23 5ஜி ஸ்மார்ட்போன் போல்டு கோல்டு மற்றும் கூல் பிலாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனை அமேசான், ஒப்போ வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.

Tags:    

Similar News