மொபைல்ஸ்

இந்தியாவில் புது A சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த ஒப்போ - விலை இவ்வளவு தானா?

Update: 2022-08-03 07:59 GMT
  • ஒப்போ நிறுவனம் மிட் ரேன்ஜ் பிரிவில் புது ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
  • இதில் மீடியாடெக் ஹீலியோ பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் புதிதாக ஒப்போ A77 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஒப்போ A77 மாடலில் 6.56 இன்ச் IPS LCD ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது.

ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கலர் ஓ.எஸ். 12.1 கொண்டிருக்கும் ஒப்போ A77 மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 33 வாட் சூப்பர் வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2 MP மேக்ரோ / டெப்த் சென்சார், எல்இடி பிளாஷ் மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.


பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஒப்போ A77 மாடலில் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி, 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டுள்ளது.

விலை விவரங்கள்:

ஒப்போ A77 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 15 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பயனர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் வரை கேஷ்பேக் பெற முடியும்.

Tags:    

Similar News