விரைவில் இந்தியா வரும் ஒன்பிளஸ் நார்டு 3
- ஒன்பிளஸ் நிறுவனம் நிறுவனம் நார்டு பிராண்டிங்கில் புது வாட்ச் மற்றும் பேண்ட் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்.
- இத்துடன் நார்டு 3 ஸ்மார்ட்போனும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு சீரிசை விரிவுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் நார்டு சாதனங்கள் வரிசையில், நார்டு பட்ஸ் CE ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சமீபத்தில் தான் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 299 ஆகும்.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு பிராண்டிங்கில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நிறைந்த புது சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் நார்டு 3 ஸ்மார்ட்போனும் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இத்துடன் நார்டு வாட்ச், நார்டு பேண்ட் மற்றும் புதிய நார்டு பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் மாடலும் அடங்கும்.
பிரபல டிப்ஸ்டரான முகுல் ஷர்மா வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என தெரிவித்து இருக்கிறார். முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் ஒன்பிளஸ் இந்தியா வலைதளத்தில் இடம்பெற்று இருந்ததாக அவர் தெரிவித்து இருந்தார். இந்த மாடலில் 6.7 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 8100 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 4500 எம்ஏஹெச் பேட்டரி, 150 வாட் சூப்பர் பிளாஷ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்டும் என தெரிகிறது.
நார்டு 3 ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் நார்டு வாட்ச் மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த வாட்ச் மாடல் விலை ரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்தியாவில் ஒன்பிளஸ் வாட்ச் மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், நார்டு வாட்ச் விலை குறைவு தான் எனலாம். ஒன்பிளஸ் நார்டு வாட்ச் வட்ட வடிவ டயல் மற்றும் செவ்வக வடிவம் கொண்ட டயல் என இரு மாடல்களில் கிடைக்கும் என தெரிகிறது.