மொபைல்ஸ்

ஒன்பிளஸ் நார்டு 2T ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரம் லீக்கானது

Update: 2022-06-27 08:59 GMT
  • ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி மாடலில் ஆக்சிஜன் 12.1 இயங்குதளம் இடம்பெற்றுள்ளது.
  • இது மீடியாடெக் டைமென்சிட்டி 1300 புராசசரை கொண்டுள்ளது.

ஒன்பிளசின் நார்டு 2T 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ளது. அதன் வெளியிட்டு விவரம் லீக் ஆகி உள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 1ந் தேதி அறிமுகம் செய்யப்பட்டு, ஜூலை 5ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது. இதன் விலை விவரமும் லீக் ஆகி உள்ளது.

அதன்படி இதன் 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.28 ஆயிரத்து 999 ஆகவும், 12ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.33 ஆயிரத்து 999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி மாடலில் ஆக்சிஜன் 12.1 இயங்குதளம், 6.43 இன்ச் புல் ஹெச்.டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மீடியாடெக் டைமென்சிட்டி 1300 புராசசரை கொண்டுள்ளது. டிரிபிள் கேமரா செட் அப் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன், 4500 mAh பேட்டரி பேக் அப் உடன் வருகிறது.

Tags:    

Similar News