மொபைல்ஸ்

பட்ஜெட் பிரிவில் புது ஸ்மார்ட்போன் உருவாக்கும் நத்திங்... வெளியான முக்கிய தகவல்..!

Published On 2025-10-26 15:11 IST   |   Update On 2025-10-26 15:11:00 IST
  • புதிய நத்திங் போன் 3a லைட் ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
  • நத்திங் போன் 3a லைட் நவம்பர் மாத தொடக்கத்தில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நத்திங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. அந்த வகையில், நத்திங் நிறுவனம் இந்தியா உட்பட சர்வதேச சந்தையில் நத்திங் போன் 3a லைட் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் முன்னதாக கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த வரிசையில், தற்போது, நத்திங் போன் 3a லைட் விலை மற்றும் வெளியீட்டு தேதி ஆன்லைனில் கசிந்துள்ளது. புதிய நத்திங் போன் 3a லைட் ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஒற்றை வேரியண்டில் கிடைக்கும் என்று தெரிகிறது.

பிரெஞ்சு வெளியீடான டீ-லேப்ஸ் அறிக்கையின்படி , நத்திங் போன் 3a லைட் நவம்பர் மாத தொடக்கத்தில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 04 ஆம் தேதி ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு வரக்கூடும் என்று கூறப்படுகிறது. இது தவிர, பிரான்சில் இந்த ஸ்மார்ட்போன் 249.99 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 25,525) ஆரம்ப விலையில் வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

சில ஐரோப்பிய நாடுகளில் இந்த ஸ்மார்ட்போனின் விலை EUR 239.99 ஆக இன்னும் குறைவாக இருக்கலாம் என்றும் அறிக்கை கூறுதுகிறது. மேலும், நத்திங் போன் 3a லைட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட ஒற்றை வேரியண்டில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் என இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கக்கூடும்.

நத்திங் போன் 3a லைட் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

கீக்பென்ச் தள விவரங்களின் படி, இந்த ஸ்மார்ட்போன் A001T என்ற மாடல் நம்பர் கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இத்துடன் மாலி-G615 MC2 GPU கொண்டிருக்கும் என்று தெரிகிறது. புதிய நத்திங் ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் உடன் வரும் என்றும் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஓஎஸ் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News