மொபைல்ஸ்

இணையத்தில் லீக் ஆன நத்திங் போன் (2) வெளியீட்டு விவரங்கள்

Published On 2023-01-31 08:29 GMT   |   Update On 2023-01-31 08:29 GMT
  • நத்திங் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • நத்திங் நிறுவனம் அமெரிக்க சந்தையில் அதிக முக்கியத்துவம் கொடுக்க இருப்பதாக கால் பெய் தெரிவித்தார்.

நத்திங் போன் (2) ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் நத்திங் தலைமை செயல் அதிகாரி கால் பெய் நத்திங் போன் (1) மாடலின் மேம்ட்ட வெர்ஷனை அறிமுகம் செய்வதில் நிறுவனம் அவசரம் கொள்ளவில்லை என தெரிவித்து இருந்தார்.

எனினும், நத்திங் போன் (2) அறிமுகமாகாது என்றில்லை. இரண்டாவது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்ள நத்திங் நிறுவனம் திட்டமிடுகிறது. அந்த வகையில், நத்திங் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த முறை இந்திய சந்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாது என தெரிகிறது.

இதுகுறித்து தனியார் நிறுவனத்திற்கு பேட்டியளித்த கால் பெய், "நத்திங் போன் (2) மாடலுக்கு அமெரிக்க சந்தை முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாக நத்திங் போன் (2) இந்தியாவில் அறிமுகமாகாது என்றில்லை, ஆனாலும், வெளியீடு முதலில் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்படும். முன்னதாக நத்திங் போன் (1) மாடல் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்படவே இல்லை."

"எங்களின் இரண்டாவது ஆண்டில் இருந்ததால், எங்களால் இதை செய்ய முடியவில்லை. மேலும் குழுவாக நாங்கள் புது சாதனங்களை உருவாக்கி வந்ததால் எங்களின் கைகள் கட்டப்பட்டு இருந்தன. தற்போது எங்களின் நிலை மாறி இருப்பதால், நாங்கள் அடுத்தக் கட்டத்திற்கு செல்ல தயாராகி விட்டோம்," என அவர் மேலும் தெரிவித்தார்.

புது ஸ்மார்ட்போன் அம்சங்கள் பற்றி கால் பெய் எந்த விதமான தகவலையும் வழங்கவில்லை. எனினும், இது முந்தைய மாடலை அதிக பிரீமியமாக இருக்கும் என்றும் இதன் மென்பொருள் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பானதாக இருக்கும் என அவர் தெரிவித்தார். பிரீமியம் என்ற வகையில், இந்த ஸ்மார்ட்போனில் ஃபிளாக்ஷிப் தர அம்சங்கள் வழங்கப்படலாம்.

Tags:    

Similar News