மொபைல்ஸ்

4700 எம்ஏஹெச் பேட்டரியுடன் உருவாகும் நத்திங் போன் (2) - வெளியீடு எப்போ தெரியுமா?

Update: 2023-05-26 06:03 GMT
  • நத்திங் போன் (2) மாடலில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.
  • நத்திங் போன் (2) மாடல் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

நத்திங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் நத்திங் போன் (2) விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய நத்திங் போன் (2) மாடலில் 4700 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்று நத்திங் நிறுவனர் கார்ல் பெய் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். முந்தைய நத்திங் போன் (1) மாடலில் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய நத்திங் போன் (2) மாடலில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்படலாம். நத்திங் போன் (1) மாடல் விற்பனையில் இதுவரை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. நத்திங் போன் (1) விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஸ்மார்ட்போனில் முதல்முறை அம்சங்களை வழங்குவதோடு, பயனர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுக்கவே நத்திங் நிறுவனம் முன்னுரிமை அளிப்பதாக கார்ல் பெய் தெரிவித்து இருக்கிறார். ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பென்ச்மார்க் விவரங்களின் படி நத்திங் போன் (2) மாடலில் 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இத்துடன் FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே, அதிகபட்சம் 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

நத்திங் போன் (2) மாடல் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நத்திங் போன் (1) மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முறை நத்திங் போன் (2) மாடல் அமெரிக்க சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் நத்திங் போன் (2) மாடல் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News