மொபைல்ஸ்

நத்திங் போன் (1) லைட் வெளியீடு - சிஇஒ கால் பெய் என்ன சொன்னார் தெரியுமா?

Update: 2022-08-05 04:09 GMT
  • நத்திங் நிறுவனம் போன் (1) லைட் பெயரில் புது ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • மேலும் புது ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றியும் தகவல் வெளியானது.

நத்திங் போன் (1) மாடலின் வெளியீட்டை தொடர்ந்து நத்திங் போன் (1) லைட் பெயரில் புது ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வந்தது. நத்திங் போன் (1) மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் க்ளிம்ப் இண்டர்பேஸ் எல்இடி லைட்கள், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் புதிய லைட் வெர்ஷனில் இடம்பெறாது என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், நத்திங் நிறுவன தலைமை செயல் அதிகாரி கால் பெய் புது ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி வெளியான தகவல்களில் உண்மை இல்லை என தெரிவித்து இருக்கிறார். நத்திங் போன் (1) லைட் பற்றி ட்விட்டரில் வெளியாகி இருந்த தகவலை குறிப்பிட்டு, அது போலி தகவல் என கார்ல் பெய் தெரிவித்தார்.


எனினும், கார்ல் பெய் ட்விட்டர் தகவலில் நத்திங் போன் (1) லைட் உருவாக்கப்படுவதே பொய்யான தகவலா அல்லது அதில் க்ளிம்ப் இண்டர்பேஸ் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் நீக்கப்பட்டு இருக்கும் என்ற தகவலில் உண்மை இல்லையா என்பது தெளிவற்ற நிலையிலேயே உள்ளது.

நத்திங் போன் (1) மாடலில் டிசைன் கோளாறு, ஹார்டுவேர் பிரச்சினைகள், தரத்தில் குறைபாடு என ஏராளமான குற்றச்சாட்டை பயனர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் சமீபத்தில் வெளியான தகவலில் நத்திங் நிறுவனம் இரண்டு புதிய வயர்லெஸ் இயர்போன் மாடல்களை உருவாக்கி வருவதாக கூறப்பட்டது. இரு இயர்போன்களில் ஒன்று இயர் (1) மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News