மொபைல்ஸ்

நோக்கியா X30 5ஜி இந்திய விற்பனை துவக்கம் - விலை மற்றும் சலுகை விவரங்கள்

Published On 2023-02-20 05:45 GMT   |   Update On 2023-02-20 05:45 GMT
  • நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போன் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
  • புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இன்று புதிய நோக்கியா X30 5ஜி விற்பனை துவங்கி இருக்கிறது. நோக்கியா X30 5ஜி விற்பனை நோக்கியா இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசான் இந்தியாவில் நடைபெறுகிறது.

அம்சங்களை பொருத்தவரை நோக்கியா X30 5ஜி மாடலில் 6.43 இன்ச் FHD+ 90Hz AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

 

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ், 4230 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் சலுகை விவரங்கள்:

புதிய நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போன் ஐஸ் வைட் மற்றும் கிளவுடி புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 48 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ரூ. 2 ஆயிரத்து 799 மதிப்புள்ள நோக்கியா கம்ஃபர்ட் இயர்பட்ஸ் இலவசம்

ரூ. 2 ஆயிரத்து 999 மதிப்புள்ள 33 வாட் சார்ஜர் இலவசம்

அமேசான் வலைதளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு ரூ. 2 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி

 

நோக்கியா X30 5ஜி அம்சங்கள்:

6.43 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

அட்ரினோ 619L GPU

8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

டூயல் சிம் ஸ்லாட்

ஆண்ட்ராய்டு 12

50MP பிரைமரி கேமரா, OIS, எல்இடி ஃபிளாஷ்

13MP அல்ட்ரா வைடு கேமரா, கார்னிங் கொரில்லா கிளாஸ் DX+ கேமரா கிளாஸ் பாதுகாப்பு

16MP செல்ஃபி கேமரா

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

வாட்டர் ரெசிஸ்டண்ட் IP67

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

யுஎஸ்பி டைப் சி

4200 எம்ஏஹெச் பேட்டரி

33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

Tags:    

Similar News