மொபைல்ஸ்

ரூ. 1849 மட்டும்தான்.. புதிய ஃபீச்சர்போன்களை அறிமுகம் செய்த நோக்கியா..!

Published On 2023-08-10 11:02 GMT   |   Update On 2023-08-10 11:02 GMT
  • புதிய நோக்கியா ஃபீச்சர் போன் மாடல்களில் வயர்லெஸ் எப்எம் ரேடியோ வசதி உள்ளது.
  • இரண்டு புதிய நோக்கியா ஃபீச்சர் போன்களும் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கின்றன.

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 130 மியூசிக் (2023) மற்றும் நோக்கியா 150 (2023) மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய நோக்கியா 130 மியூசிக் மாடல் அந்நிறுவனத்தின் நோக்கியா 130 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். நோக்கியா 130 மாடல் 2017 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. நோக்கியா 150 மாடல் 2020 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

நோக்கியா 130 மியூசிக் மாடலில் சக்திவாய்ந்த பிராசஸர், MP3 பிளேயர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 32 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் கொண்ட மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் வழங்கப்படுகிறது. இதில் உள்ள எப்எம் ரேடியோவை வயர்டு மற்றும் வயர்லெஸ் மோட்களில் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இதில் உள்ள பில்ட்-இன் ஸ்டோரேஜ் 1450 எம்ஏஹெச் பேட்டரி 32 நாட்களுக்கு ஸ்டான்ட்பை வழங்குகிறது.

 

நோக்கியா 130 மியூசிக் (2023) அம்சங்கள்:

2.4 இன்ச் 240x320 பிக்சல் QVGA டிஸ்ப்ளே

நோக்கியா சீரிஸ் 30+ ஒஎஸ்

4MB மெமரி

மெமரியை நீட்டிக்கும் வசதி

வயர்லெஸ் எப்எம் ரேடியோ, MP3 பிளேயர்

டூயல் பேன்ட் 900/1800MHz

மைக்ரோ யுஎஸ்பி போர்ட்

3.5mm ஆடியோ ஜாக்

1450 எம்ஏஹெச் பேட்டரி

34 நாட்களுக்கு ஸ்டான்ட்பை டைம்

 

நோக்கியா 150 மியூசிக் 2023 அம்சங்கள்:

2.4 இன்ச் 240x320 பிக்சல் QVGA டிஸ்ப்ளே

நோக்கியா சீரிஸ் 30+ ஒஎஸ்

4MB மெமரி

மெமரியை நீட்டிக்கும் வசதி

வயர்லெஸ் எப்எம் ரேடியோ, MP3 பிளேயர்

டூயல் பேன்ட் 900/1800MHz

விஜிஏ கேமரா, எல்இடி பிளாஷ்

மைக்ரோ யுஎஸ்பி போர்ட்

3.5mm ஆடியோ ஜாக்

1450 எம்ஏஹெச் பேட்டரி

34 நாட்களுக்கு ஸ்டான்ட்பை டைம்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

நோக்கியா 130 மியூசிக் மாடல் டார்க் புளூ, பர்பில் மற்றும் லைட் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் டார்க் புளூ மற்றும் பர்பில் நிற வேரியண்ட்களின் விலை ரூ. 1849 என்றும் லைட் கோல்டு நிற வேரியன்ட் விலை ரூ. 1949 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நோக்கியா 150 (2023) மாடலின் சார்கோல், சியான் மற்றும் ரெட் நிற வேரியன்ட்களின் விலை ரூ. 2 ஆயிரத்து 699 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News