மொபைல்ஸ்

பின்பக்கம் கிளாஸ் பேனல் உடன் கூடிய லாவாவின் மலிவு விலை ஸ்மார்ட்போன் - விலை இவ்வளவு தானா?

Published On 2022-06-15 04:18 GMT   |   Update On 2022-06-15 04:18 GMT
  • 3 கேமரா செட் அப் உடன் இந்த போன் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது.
  • ஜூன் மாத இறுதியில் லாவா நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லாவா நிறுவனம் அக்னி என்கிற தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனை கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது. அதன்பின்னர் அந்நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் குறித்து எந்தவித அப்டேட்டும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில், அந்நிறுவனம் தற்போது தனது அடுத்த ஸ்மார்ட்போனை வெளியிட தயாராகி உள்ளது.

அதன்படி அந்நிறுவனம் மலிவு விலையில் பின்பகுதியில் கிளாஸ் பேனல் உடன் கூடிய ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.10 ஆயிரத்திற்கும் கீழ் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பின்பகுதியில் 3 கேமரா செட் அப் உடன் அந்த போன் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது.


இந்த ஸ்மார்ட்போன் UniSoc சிப்செட் உடன் வர வாய்ப்புள்ளது. இந்த மாத இறுதியில் லாவா நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்பகுதியில் கிளாஸ் பேனல் உள்ளதே இதன் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த போனுக்கு சந்தையில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News