மொபைல்ஸ்

50MP கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் அறிமுகமான புது லாவா போன்

Published On 2022-09-21 04:11 GMT   |   Update On 2022-09-21 04:11 GMT
  • லாவா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
  • இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் பிரீமியம் கிளாஸ் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது.

லாவா நிறுவனம் பிளேஸ் சீரிசில் புது ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. மேலும் தனது விளம்பர தூதராக கார்திக் ஆர்யனை லாவா நியமனம் செய்துள்ளது. விரைவில் லாவா பிராண்டு ஸ்மார்ட்போன்களுக்கு கார்திக் ஆர்யன் விளம்பரப்படுத்தும் பிரச்சாரம் துவங்கும் என்றும் லாவா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் HD+ 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர், 4 ஜிபி ரேம், 3 ஜிபி வரை கூடுதல் மெமரி கிளாஸ் பேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கும் லாவா பிளேஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, டெப்த் கேமரா, மேக்ரோ லென்ஸ் மற்றும் 8MP செல்பி கேமரா கொண்டிருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

 லாவா பிளேஸ் ப்ரோ அம்சங்கள்:

6.51 இன்ச் 1600x720 பிக்சல் வளைந்த ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே

90Hz ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர்

IMG பவர் VR GE8320 GPU

4 ஜிபி ரேம்

64 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 12

டூயல் சிம் ஸ்லாட்

50MP பிரைமரி கேமரா

டெப்த் சென்சார், மேக்ரோ கேமரா, எல்இடி பிளாஷ்

8MP செல்பி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ

4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

யுஎஸ்பி டைப் சி

5000 எம்ஏஹெச் பேட்டரி

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

புதிய லாவா பிளேஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் கிளாஸ் கோல்டு, கிளாஸ் கிரீன், கிளாஸ் புளூ மற்றும் கிளாஸ் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 10 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் லாவா வலைதளங்களில் நடைபெறுகிறது.

Tags:    

Similar News