மொபைல்ஸ்

6 ஜிபி ரேம், கிளாஸ் பேக் கொண்ட புதிய லாவா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2023-04-10 08:10 GMT   |   Update On 2023-04-10 08:10 GMT
  • லாவா நிறுவனத்தின் புதிய பிளேஸ் 2 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், கிளாஸ் பேக், 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.
  • 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே கொண்ட பிளேஸ் 2 மாடல் யுனிசாக் டி616 ஆக்டா கோர் பிராசஸர் கொண்டிருக்கிறது.

லாவா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லாவா பிளேஸ் 2 மாடலில் 6.5 இன்ச் HD+ 90Hz டிஸ்ப்ளே, யுனிசாக் டி616 ஆக்டா கோர் பிராசஸர், 6 ஜிபி ரேம், 5 ஜிபி வரை கூடுதலாக விர்ச்சுவல் ரேம் வழங்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கும் லாவா பிளேஸ் 2 மாடலில் புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 8MP செல்ஃபி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது.

 

லாவா பிளேஸ் 2 அம்சங்கள்:

6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே 90Hz ரிப்ரெஷ் ரேட்

2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் யுனிசாக் டி616 பிராசஸர்

மாலி G57 GPU

6 ஜிபி ரேம்

128 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ்

13MP பிரைமரி கேமா

2MP மேக்ரோ கேமரா, எல்இடி ஃபிளாஷ்

8MP செல்ஃபி கேமரா

3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5

யுஎஸ்பி டைப் சி போர்ட்

5000 எம்ஏஹெச் பேட்டரி

18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போன் கிளாஸ் புளூ, கிளாஸ் பிளாக் மற்றும் கிளாஸ் ஆரஞ்சு என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 8 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் லாவா வலைதளங்களில் ஏப்ரல் 18 ஆம் தேதி துவங்குகிறது.

Tags:    

Similar News