மொபைல்ஸ்
null

டிமென்சிட்டி 7050 பிராசஸர் கொண்ட லாவா அக்னி 2 5ஜி இந்தியாவில் அறிமுகம்

Published On 2023-05-16 08:00 GMT   |   Update On 2023-05-16 08:29 GMT
  • லாவா நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது.
  • இத்துடன் 4700 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

லாவா நிறுவனத்தின் புதிய அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் FHD+ dual curved AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் கீழ்புறம் 2.3mm பெசல் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர், 3rd Gen 2900mm² வேப்பர் சேம்பர் கூலிங் தொழில்நுட்பம், X ஆக்சிஸ் லீனியர் மோட்டார் ஹேப்டிக்ஸ், மேட் ஃபினிஷ் ரிடியன் நிறம் மற்றும் ரி-இன்ஃபோர்ஸ் செய்யப்பட்ட கிலாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 13 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்யும் வசதி உள்ளது.

 

இத்துடன் 8 ஜிபி ரேம், 8 ஜிபி விர்ச்சுவல் ரேம், 256 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட்கள், மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட உள்ளது. 50MP குவாட் கேமரா செட்டப் கொண்டிருக்கும் அக்னி 2 5ஜி மாடலில் 4700 எம்ஏஹெச் பேட்டரி, 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

லாவா அக்னி 2 5ஜி அம்சங்கள்:

6.78 இன்ச் 2400x1080 பிக்சல் Full HD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர்

மாலி G68 MC4 GPU

8 ஜிபி ரேம்

256 ஜிபி மெமரி

டூயல் சிம் ஸ்லாட்

ஆண்ட்ராய்டு 13

50MP பிரைமரி கேமரா

அல்ட்ரா வைடு, டெப்த் மற்றும் மேக்ரோ கேமரா சென்சார்கள்

16MP செல்ஃபி கேமரா

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

யுஎஸ்பி டைப் சி

4700 எம்ஏஹெச் பேட்டரி

66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 24 ஆம் தேதி அமேசான் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் முன்னணி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி பெறலாம்.

Tags:    

Similar News