மொபைல்ஸ்

ரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டில் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2023-03-10 04:03 GMT   |   Update On 2023-03-10 04:03 GMT
  • ஐடெல் நிறுவனத்தின் புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார், 5MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.
  • மூன்றுவித நிறங்களில் கிடைக்கும் புதிய ஐடெல் A60 ஸ்மார்ட்போன் ஆஃப்லைனிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய A60 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஐடெல் A60 மாடல் இந்த பிரிவில் பல்வேறு முதல் முறை அம்சங்களை கொண்டிருக்கிறது. 6.6 இன்ச் HD+ வாட்டர் டிராப் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, கைரேகை சென்சார், ஃபேஸ் ரெகக்னீஷன் தொழில்நுட்பம் போன்ற அம்சங்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கிறது.

நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் ஐடெல் A60 புகைப்படங்களை எடுக்க டூயல் 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இத்துடன் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, SC9832E பிராசஸர், ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் ஒஎஸ் வழங்கப்பட்டுள்ளது.

 

ஐடெல் A60 அம்சங்கள்:

6.6 இன்ச் HD டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச்

SC9832E பிராசஸர்

2 ஜிபி ரேம்

32 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

கைரேகை சென்சார்

ஃபேஸ் ஐடி

8MP பிரைமரி கேமரா

விஜிஏ இரண்டாவது கேமரா, ஃபிளாஷ்

5MP செல்ஃபி கேமரா

ஒடிஜி சப்போர்ட், ஏஐ பவர் மாஸ்டர்

5000 எம்ஏஹெச் பேட்டரி

ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

புதிய ஐடெல் A60 ஸ்மார்ட்போன் டான் புளூ, வெர்ட் மென்த் மற்றும் சஃபையர் பிளாக் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது. விலை ரூ. 5 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News