மொபைல்ஸ்

8 ஜிபி ரேம் கொண்ட ஐகூ Z7s இந்தியாவில் அறிமுகம்

Update: 2023-05-22 06:07 GMT
  • இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 13 வழங்கப்பட்டு உள்ளது.
  • புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, OIS+EIS, 2MP டெப்த் கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

ஐகூ பிராண்டின் முற்றிலும் புதிய ஐகூ Z7s 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஐகூ Z7 ஸ்மார்ட்போனினை தொடர்ந்து புதிய Z7s மாடல் அறிமுகமாகி இருக்கிறது. இதில் 6.38 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு உள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் கொண்டிருக்கும் Z7s மாடலில் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை எக்ஸ்டெண்டட் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 13 வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி பேட்ச்கள் வழங்கப்பட இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, OIS+EIS, 2MP டெப்த் கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

ஐகூ Z7s அம்சங்கள்:

6.38 இன்ச் 2400x1080 பிக்சல் Full HD+ AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

அட்ரினோ 619L GPU

6 ஜிபி, 8 ஜிபி ரேம்

128 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 13

64MP பிரைமரி கேமரா

2MP டெப்த் கேமரா

16MP செல்ஃபி கேமரா

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

3.5mm ஆடியோ ஜாக்

5ஜி , டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6

ப்ளூடூத் 5.2

யுஎஸ்பி டைப் சி

4500 எம்ஏஹெச் பேட்டரி

44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ஐகூ Z7s 5ஜி ஸ்மார்ட்போன் நார்வே புளூ மற்றும் பசிபிக் நைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதன் விற்பனை அமேசான் மற்றும் ஐகூ வலைதளங்களில் நடைபெறுகிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஐசிஐசிஐ/ஹெச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

Tags:    

Similar News