மொபைல்ஸ்

ரூ. 17 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் ஐகூ Z7 5ஜி

Published On 2023-03-18 05:09 GMT   |   Update On 2023-03-18 05:09 GMT
  • ஐகூ நிறுவனத்தின் Z7 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
  • புதிய ஐகூ Z7 5ஜி மாடலின் அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன.

ஐகூ நிறுவனம் தனது அடுத்த தலைமுறை Z சீரிஸ் ஸ்மார்ட்போனினை மார்ச் 21 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. வெளியீட்டுக்கு முன் புதிய ஐகூ Z7 5ஜி ஸ்மார்ட்போன் விலை விவரங்களை ஐகூ நிறுவனம் அறிவித்து இருக்கிறது. புதிய ஐகூ ஸ்மார்ட்போன் Z6 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்திய சந்தையில் ஐகூ Z7 5ஜி ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும். இதன் பேஸ் வேரியண்டில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரியும் மற்றொரு மாடலில் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 18 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

 

அறிமுக சலுகையாக புதிய ஐகூ Z7 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குவோர் ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் மாத தவணை முறை பரிவர்த்தனை செய்யும் போது ரூ. 1500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ஐகூ Z7 5ஜி பேஸ் வேரியண்ட் விலை ரூ. 17 ஆயிரத்து 499 என்றும் 8 ஜிபி வேரியண்ட் விலை ரூ. 18 ஆயிரத்து 499 என்றும் மாறிவிடும்.

இத்துடன் புதிய ஐகூ Z7 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியையும் ஐகூ அறிவித்து இருக்கிறது. ஐகூ Z7 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை மார்ச் 21 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்க இருக்கிறது. விற்பனை அமேசான் தளத்தில் பிரத்யேகமாக நடைபெற இருக்கிறது. ஐகூ Z7 5ஜி ஸ்மார்ட்போன் நார்வே புளூ மற்றும் பசிபிக் நைட் நிறங்களில் கிடைக்கிறது.

ஐகூ Z7 5ஜி அம்சங்கள்:

புதிய ஐகூ Z7 5ஜி ஸ்மார்ட்போனில் 6.38 இன்ச் FHD+ ரெசல்யுஷன் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், மீடியாடெக் டிமென்சிட்டி 920 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு வைபை 6, டூயல் சிம் 5ஜி, ப்ளூடூத் உள்ளது.

புகைப்படங்களை எடுக்க டூயல் 64MP OIS கேமரா வழங்கப்படுகிறது. இதில் உள்ள 4 வாட் ஃபிளாஷ்சார்ஜ் தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனினை 25 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிடும். 

Tags:    

Similar News