மொபைல்ஸ்

ஸ்மார்ட்போனுடன் ஒரே நாளில் இரு சாதனங்களை களமிறக்கும் ஐகூ

Published On 2025-08-02 07:42 IST   |   Update On 2025-08-02 07:42:00 IST
  • இயர்பட்ஸ் இரண்டு வண்ணங்களில் வழங்கப்படும்.
  • சீன நிறுவனம் ஏற்கனவே வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை உறுதிப்படுத்தியுள்ளது.

ஐகூ Z10 டர்போ பிளஸ் மற்றும் ஏர் 3 ப்ரோ இயர்பட்ஸ்-இன் வெளியீட்டு தேதியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னர் பகிரப்பட்ட டீஸரில், வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. இப்போது, அதன் வண்ண விருப்பங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போன் மற்றும் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) உடன், சீனாவில் ஒரு பவர் பேங்க் வெளியிடப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த புதிய சாதனங்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா, இல்லையா என்பதை ஸ்மார்ட்போன் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.

சீன சமூக வலைதளமா வெய்போவில் ஐகூ Z10 டர்போ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 7 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று ஐகூ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் போலார் கிரே, கிளவுட் ஒயிட் மற்றும் டெசர்ட் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் தவிர, நிறுவனம் சீனாவில் மேலும் இரண்டு சாதனங்களை வெளியிட உள்ளது. ஐகூ ஏர் 3 ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் 10,000mAh பவர் பேங்க் ஆகியவை அதே தேதியில் அறிமுகம் செய்யப்படும். இந்த இயர்பட்ஸ் இரண்டு வண்ணங்களில் வழங்கப்படும். ஸ்டார் டயமண்ட் ஒயிட் மற்றும் ஸ்டார் யெல்லோ, அதே நேரத்தில் பவர் பேங்க் எக்ஸ்ட்ரீம் யெல்லோ என்ற ஒற்றை வண்ண விருப்பத்தில் வரும்.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

சீன நிறுவனம் ஏற்கனவே வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை உறுதிப்படுத்தியுள்ளது. ஐகூ Z10 டர்போ பிளஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 9400+ சிப் மூலம் இயக்கப்படும். இது 8,000mAh பேட்டரி வழங்கப்படும். இதன் டிஸ்ப்ளே 2,000 nits வரை பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கும்.

ஏற்கனவே லீக் ஆன தகவல்களின் படி ஐகூ Z10 டர்போ பிளஸ் ஸ்மார்ட்போன் 144Hz ரிப்ரெஷ் ரேட் உடன் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று பரிந்துரைத்தன. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, இது 50MP பிரைமரி கேமராவையும், 8MP அல்ட்ரா-வைடு லென்ஸ் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. முன்பக்கத்தில், இது 16MP செல்ஃபி கேமராவுடன் வரலாம். இந்த ஸ்மார்ட்போனஅ ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொண்டிருக்கும்.

ஐகூ ஏர் 3 ப்ரோ மாடலில் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் செமி-இன்-இயர் வடிவமைப்பை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், 10,000mAh பவர் பேங்க் 22.5W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும்.

Tags:    

Similar News