7000mAh பேட்டரி, 50MP கேமராவுடன் புதிய ஐகூ 15 அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா..?
- ஸ்மா்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசஸர் கொண்டிருக்கிறது.
- புதிய ஐகூ 15 மாடலில் மிகப்பெரிய 8000மிமீ ஒற்றை அடுக்கு வேப்பர் கூலிங் சிஸ்டம் கொண்டுள்ளது.
ஐகூ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி, சீன சந்தையில் ஐகூ 15 ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 6.85-இன்ச் 2K+ 144Hz 8T LTPO ஃபிளாட் ஸ்கிரீன் கொண்டுள்ளது. இது உலகின் முதல் 2K LEAD OLED தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. குறைந்த மின் நுகர்வு, அதிக பிரகாசம், மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் நட்பு, மெலிதான வடிவமைப்பு மற்றும் உலகின் முதல் மகிழ்ச்சியான கண் பாதுகாப்பு 2.0 ஆகியவற்றை வழங்குகிறது.
இந்த ஸ்மா்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசஸர் கொண்டிருக்கிறது. 16 ஜிபி வரை LPDDR5X அல்ட்ரா ப்ரோ ரேம் மற்றும் 1 டிபி வரை UFS 4.1 ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. புதிய ஐகூ 15 மாடலில் மிகப்பெரிய 8000மிமீ ஒற்றை அடுக்கு வேப்பர் கூலிங் சிஸ்டம் கொண்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க ஐகூ 15 ஸ்மார்ட்போன் OIS உடன் 50MP பிரைமரி கேமரா, 50MPஅல்ட்ரா-வைடு லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா, 50MP சோனி ப்ரோ-லெவல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை உள்ளன.
புதிய ஐகூ 15 ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 100W அல்ட்ரா-ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
விலை விவரங்கள்:
சீன சந்தையில் புதிய ஐகூ 15 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை 4199 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 51,780 என துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.