மொபைல்ஸ்

200MP கேமரா, 180 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்

Update: 2022-10-06 06:25 GMT
  • இன்பினிக்ஸ் நிறுவனம் பிளாக்‌ஷிப் அம்சங்கள் நிறைந்த புது ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
  • புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் இன்பினிக்ஸ் ஜீரோ சீரிசில் அறிமுகமாகி உள்ளது.

இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக ஜீரோ அல்ட்ரா பெயரில் புது ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா மாடலில் 6.8 இன்ச் 3D FHD+ 120Hz AMIOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 920 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி உள்ளது.

புகைப்படங்களை எடுக்க 200MP பிரைமரி கேமரா, OIS, 13MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP கேமரா, 32MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 180 வாட் தண்டர் சார்ஜ் வசதி கொண்டிருக்கிறது.

இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா அம்சங்கள்:

6.8 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 3D AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 920 பிராசஸர்

மாலி-G68 MC4 GPU

8 ஜிபி ரேம்

256 ஜிபி மெமரி

ஆண்ட்ராய்டு 12 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 12

டூயல் சிம் ஸ்லாட்

200MP பிரைமரி கேமரா

13MP அல்ட்ரா வைடு கேமரா

2MP டெப்த் சென்சார்

32MP செல்பி கேமரா

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2

4500 எம்ஏஹெச் பேட்டரி

180 வாட் தண்டர் சார்ஜ்

விலை விவரங்கள்:

இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை 520 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 42 ஆயிரத்து 405 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. 

Tags:    

Similar News