5 நாட்கள் வரை தாங்கும் பேட்டரி பேக் அப்... கீழே விழுந்தாலும் உடையாத வலிமையான ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தாச்சு
- டூகி S89 ப்ரோ ஸ்மார்ட்போன் 12 ஆயிரம் எம்.ஏ.ஹெச் பேட்டரி பேக் அப்பை கொண்டுள்ளது.
- டிரிபிள் கேமரா செட் அப் உடன் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது.
டூகி நிறுவனம் அதன் வலிமை வாய்ந்த டூகி S89 ப்ரோ என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதனை வலிமையான போன் என குறிப்பிடுவது ஏன் என்றால் இது கீழே விழுந்தாலும் உடையாதாம். அதுமட்டுமின்றி வாட்டர் ப்ரூஃப் கொண்ட போனாகவும் இது உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் கூடுதல் சிறப்பு அதன் பேட்டரி தான். 12 ஆயிரம் எம்.ஏ.ஹெச் பேட்டரி பேக் அப் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது. இந்த போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 5 நாட்கள் தாங்குமாம். இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹிலியோ P90 புராசஸர் இதில் இடம்பெற்று உள்ளது. பேட்மேன் தீம் கொண்டு இந்த ஸ்மார்ட்போனை டிசைன் செய்துள்ளனர்.
ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் எல்.சி.டி ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே இடம்பெற்று உள்ளது. டிரிபிள் கேமரா செட் அப் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 20 மெகாபிக்சல் நைட் ஷுட்டர், 8 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இதில் இடம்பெற்று உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் தற்போது அறிமுக சலுகையாக ரூ. 19 ஆயிரத்து 210-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜூலை 29 வரை மட்டுமே இந்த சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் அதன் பின்னர் இந்த ஸ்மார்ட்போன் ரூ.25 ஆயிரத்து 478-க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.