தொழில்நுட்பம்
கவாசகி மோட்டார்சைக்கிள்

ரூ. 50 ஆயிரம் வரையிலான சலுகை அறிவித்த கவாசகி

Published On 2021-01-18 15:55 IST   |   Update On 2021-01-18 16:06:00 IST
கவாசகி நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.


ஜப்பான் நாட்டு இருசக்கர வாகன உற்பத்தியாளரான கவாசகி, இந்திய சந்தையில் தனது மாடல்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது. அதன்படி தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

கவாசகி நிறுவனத்தின் கேஎல்எக்ஸ் 110, கேஎல்எக்ஸ் 140, கேஎக்ஸ் 100, டபிள்யூ800, இசட்650, வெர்சிஸ் 650 மற்றும் வல்கன் எஸ் போன்ற மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. சலுகைக்கு தேர்வான மாடல்களுடன் தள்ளுபடி கூப்பன் வழங்கப்படுகிறது. இதை கொண்டு மாடல்களின் விலையை குறைக்க முடியும்.



வாடிக்கையாளர்கள் விரும்பினால் அவர்கள் வாங்கும் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான அக்சஸரீக்களையும் தள்ளுபடி கூப்பன் கொண்டு வாங்கிக் கொள்ளலாம். இந்த சலுகை ஜனவரி 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. இந்த வவுச்சர்கள் அனைத்து கவாசகி விற்பனை மையங்களிலும் செல்லுபடியாகும்.

கவாசகி வெர்சிஸ் 650 மற்றும் வெர்சிஸ் 1000 போன்ற மாடல்களுக்கும் முறையே ரூ. 50 ஆயிரம் மற்றும் ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான அட்வென்ச்சர் வவுச்சர் வழங்கப்படுகிறது. இதை கொண்டு வாகனத்தின் விலையை குறைக்கவோ அல்லது அக்சஸரீ வாங்க முடியும்.

Similar News