தமிழக செய்திகள்

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 12 அக்டோபர் 2026...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

தமிழ்நாடு செய்திப்பிரிவு

ஊழல், சட்டம் ஒழுங்கு சீரழிவு, கூட்டணிக் கட்சிகளை நடத்திய விதம்": திமுக தோல்விக்குக் காரணங்களைப் பட்டியலிட்ட மாணிக்கம் தாகூர்

* தேர்தல் முடிந்து மக்கள் தீர்ப்பு எதிராக வந்த பிறகு மட்டும் வாக்காளர் திருத்தப் பணி மீது பழியைப் போடுவது என்ன வகையான அரசியல்?

* வரலாறு காணாத ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு எதிரான தவறான பேச்சுகள், கூட்டணிக் கட்சிகளை அவமதித்து தான் திமுகவின் உண்மையான தோல்விக்குக் காரணம்!

ரீல்ஸ் அரசு அராஜகம் செய்வது ஏன்?- உதயநிதி ஸ்டாலின் கேள்வி

* ஜனநாயக வழியில் போராட்டம் செய்யும் எந்தப் பிரிவினரையும் நேரில் அழைத்துப் பேசாமல் அடக்குமுறையை ஏவுவதற்குப் பெயர் தான் மாற்றமா?

* நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

ஹார்முஸை திறக்க 7 நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்ற அமெரிக்கா.. போதாது என ஈரான் பதில்

*ஏழு நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும்

* ஈரானின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்றும் காலிபாஃப் கூறினார்.

மதுராந்தகம், தாராபுரம் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு - பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் சபாநாயகர்

* மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட சத்தியபாமா வெற்றி பெற்றுள்ளனர்.

* பதவியேற்பின்போது அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், அருண்ராஜ், ராஜ்மோகன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

GOLD PRICE TODAY: வார தொடக்கத்தில் சற்றே குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்

* சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.13,840-க்கும் விற்பனையாகிறது.

* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

விமானத்தில் ஆக்சிஜன் குறைவு... விமானியின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய பயணிகள்

* சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.

* உயர் அதிகாரிகள் விமானி, பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

மகாராஷ்டிராவில் கும்பமேளா நடைபெறவுள்ள பகுதி நிலத்தடி நீரில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் 1,000 மடங்கு அதிகம்

*இரண்டு பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.

* மக்கள் புண்கள், தோல் தடிப்புகள் மற்றும் கொப்புளங்களால் அவதிப்படுகின்றனர்.

11 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 35 வயது நபர்.. பஞ்சாபில் கொடூரம்

*கைதானவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.

*பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதலே தனிப்பெரும் துணையே.. செக்ரியூட்டி கணவனுக்கு உணவு சமைத்து எடுத்து வந்து ஒன்றாக சாப்பிடும் மனைவி - கியூட் வீடியோ

*சில பந்தங்கள் சொர்க்கத்தில் எழுதப்பட்டவை என்று எழுதியிருந்தார்.

*பணம் மற்றும் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், ஒருவருடன் ஒருவர் இருப்பதுதான் உண்மையான சொத்து

சவுதி விமான நிலையங்கள் மீது ஹவுதிக்கள் மீண்டும் தாக்குதல்.. சண்டையில் தலையிடுவது பற்றி டிரம்ப் பதில்

*மெக்கா மற்றும் மதீனா தவிர மற்ற அனைத்து நகர விமான நிலையங்களும் இலக்கு

*இருப்பினும் இந்த தாக்குதல்களை சவுதி இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

ரஷியா - உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் அமல் - அறிவித்த டிரம்ப் - ஜெலன்ஸ்கி ரியாக்ஷன் இதுதான்

*ரஷியாவின் டீசல் ஏற்றுமதி மீதான தடையை அமெரிக்கா தளர்த்தியது.

*கடந்த வாரம் ரஷிய அதிபர் புதினுடன் ரஷியாவில் பரவுவதாக நம்பப்படும் பிளேக் நோய் பரவல் குறித்து கேட்டறிந்தார்.

பூமியை தாக்கிய சக்திவாய்ந்த சூரிய புயல்.. ரேடியோ சிக்னல்கள் பாதிப்பு

*'ஆரோரா' எனப்படும் விசித்திரமான துருவ ஒளிகள் தோன்றின.

*செயற்கைக்கோள் தொடர்புகள் மற்றும் மின்சார வினியோகக் கட்டமைப்புகளில் சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டன.

22 இந்திய மாலுமிகள் மீட்பு.. ஹார்முஸ் அருகே வர்த்தக கப்பல்கள் மீது தொடரும் தாக்குதல்களுக்கு இந்தியா கண்டனம்

*டால்பின் கப்பலில் இருந்த 11 இந்திய மாலுமிகளில் 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர், ஆனால் இருவர் இன்னும் காணவில்லை.

*வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இரண்டு வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளது.

நதிநீர் விவகாரம்: நாளை சந்திரபாபு நாயுடுவை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்

* இந்த ஆண்டு கடந்த 9-ந் தேதி வரை தமிழகத்திற்கு 2.251 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கிடைத்தது.

* தமிழகத்துக்குள் வரும் ஆறுகளில் அணை கட்டவும் ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

SCROLL FOR NEXT