பா.ம.க. அமைச்சரவையில் இடம்பெற்றால் வி.சி.க. கூட்டணியில் இருந்து வெளியேறும்- அமைச்சர் வன்னி அரசு

பா.ம.க. அமைச்சரவையில் இடம் பெற்றால் வி.சி.க. அமைச்சரவையில் இருந்து வெளியேறும்.
Vanni Arasu
Vanni Arasu
Published on: 
Summary

விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் மற்ற அ.தி.மு.க., தி.மு.க. போன்ற சராசரி கட்சி அல்ல. இது ஒரு விடுதலை இயக்கம். விடுதலைக்காக களமாடுகின்ற இயக்கம்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வண்டிமேடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. பங்கேற்று சிறப்புரையாற்றினார். மேலும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு, மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

அப்போது அமைச்சர் வன்னி அரசு பேசியதாவது:-

பா.ம.க. கூட்டணியில் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறார்கள். எனக்கு பதில் சொல்லி சொல்லி வாயும் வலித்து விட்டது. கேட்டு கேட்டு காதும் வலிக்கிறது. ஒரே வழி தான். சாதியவாத பா.ம.க., மதவாத பா.ஜ.க.வோடு விடுதலைச் சிறுத்தைகள் ஒருபோதும் கூட்டணியில்லை என்று சொல்லி முழங்கிய நம்முடைய தலைவர், மகத்தான தலைவர்.

இப்போதும் சொல்கிறேன், இந்த இடத்திலும் சொல்கின்றோம். ஒருபோதும் அதற்கான வாய்ப்பில்லை. பா.ம.க. உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என்பது தான் அதனுடைய பிரகடனம்.

விசிக

எங்களுக்கு பதவி முக்கியமல்ல. எங்களுடைய தலைவர் எழுச்சித் தமிழர் எதை கட்டளையிடுகிறாரோ, அந்த வேலையை செய்வதற்குத்தான் ஒரு அடிமட்டத் தொண்டனாக இருந்து இந்த இடத்திலே களமாடுகின்றோம். சிலர் சொல்லுகிறார்கள், பதவிக்காக நம்முடைய தலைவர் அவர்களை வாய்க்கு வந்தபடி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். புறக்கணிப்பு பாதையிலே நின்ற இயக்கம்! எங்களுக்கு இந்த தேர்தல் பாதை முக்கிய மல்ல. பா.ம.க. அமைச்சரவையில் இடம் பெற்றால் வி.சி.க. அமைச்சரவையில் இருந்து வெளியேறும். த.வெ.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்தால் வி.சி.க. கூட்டணியில் தொடராது.

திமுக

விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் மற்ற அ.தி.மு.க., தி.மு.க. போன்ற சராசரி கட்சி அல்ல. இது ஒரு விடுதலை இயக்கம். விடுதலைக்காக களமாடுகின்ற இயக்கம். இந்த இயக்கம் எப்போதும் விடுதலைக்காக, பேசக்கூடிய இயக்கம். விடுதலைதான் எங்களுடைய உயிர்மூச்சு. அந்த வகையில்தான் இந்த மண்ணிலே, இந்த தமிழ்நாட்டிலே நம்முடைய தலைவர், மகத்தான தலைவர் எழுச்சித் தமிழர் தலைமையிலே ஒவ்வொரு தொண்டனாக நாம் களமாடுகின்றோம்.

சாதி ஒழிப்பு

தமிழ்த்தேசியம் என்பது நம்முடைய உயிர்மூச்சு. இன்னைக்கு தமிழ்த்தேசியத்தை வைத்து பிழைப்பு வாதம் செய்பவர்கள், போலி தமிழ்த்தேசியவாதிகள், சாதியவாதிகள் இன்றைக்கு பிரபாகரன் பெயரை வைத்துக் கொண்டு பிழைப்புவாதம் செய்த போது, நாம் மட்டும் தான் இன்றைக்கு கொள்கைரீதியாக செயல்பட்டு கொண்டிருக்கிறோம். இந்த கொள்கையின் அடித்தளம் என்பது சாதி ஒழிப்பு.

சாதி ஒழிப்பிலிருந்துதான் தமிழ்த்தேசிய விடுதலை முகிழ்க்கும் என்பதை நம்முடைய தலைவர் எப்போதும் சொல்லி வருகிறார். அதனால் அந்த கொள்கையிலே மிக முக்கியமான கொள்கை சாதி ஒழிப்பு தமிழ்த்தேசியம். இது தான் நம்முடைய உயிர்மூச்சு.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com