மதுராந்தகம், தாராபுரம் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு - பதவிப்பிரமாணம் செய்துவைத்தார் சபாநாயகர்

தவெக சந்தித்த முதல் இடைத்தேர்தலிலேயே முத்திரை பதித்துள்ளது.
மரகதம் குமரவேல் - சபாநாயகர் பிரபாகர் - சத்தியபாமா
Published on: 
Summary

தலைமைச் செயலகத்தில் மரகதம் குமரவேல், சத்தியபாமா இருவரும் எம்எல்ஏக்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு சபாநாயகர் பிரபாகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இடைத்தேர்தல் தவெக வெற்றி

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட சத்தியபாமா வெற்றி பெற்றுள்ளனர். அந்த கட்சி சந்தித்த முதல் இடைத்தேர்தலிலேயே முத்திரை பதித்துள்ளது. 2 தொகுதிகளிலும் திமுக இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போது மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.

பதவியேற்பு

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மரகதம் குமரவேல், சத்தியபாமா இருவரும் எம்எல்ஏக்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு சபாநாயகர் பிரபாகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பின்போது அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், அருண்ராஜ், ராஜ்மோகன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com