11 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 35 வயது நபர்.. பஞ்சாபில் கொடூரம்

கைதானவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.
குழந்தை
Published on: 
Summary

பஞ்சாபில் 11 மாதக் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பீகாரை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

பஞ்சாப் மாநிலம் லூதியானவில் டெஹ்லான் பகுதியில் தாய் வேலைக்குச் சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த 11 மாதக் குழந்தையை , 35 வயது நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் அப்பகுதியில் வாடகை அறையில் வசித்து வந்தார்.

நேற்று சிறுமியின் தாய் வேலைக்குச் செல்வதற்கு முன்பு சிறுமியை தூங்க வைத்திருக்கிறார். இதை அந்த ஆசாமி நோட்டம் விட்டுள்ளார்

பாலியல் வன்கொடுமை

தாய் வேலைக்குச் சென்ற பிறகு அப்பகுதியில் வாடகை அறையில் வசித்து வந்த பீகாரை சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவர், வீட்டிற்குள் நுழைந்து பச்சிளம் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

குழந்தையின் அழுகுரலைக் கேட்டு வீட்டிற்கு விரைந்து சென்றபோது, ​​குழந்தை இரத்தப்போக்குடன் ஆடைகள் கலைந்து கிடந்ததைக் கண்டதாக பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் காவல்துறையிடம் தெரிவித்தார்.

புகாரின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டை விட்டு வெளியேறுவதையும் அவர் பார்த்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் பீகாரின் பூர்ணியா மாவட்டத்தை சேர்ந்தவர் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.

கைது

குடும்பத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவர் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை அதிகாரி குர்மீத் சிங், குற்றம் சாட்டப்பட்டவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறினார்

X

Maalai Malar
www.maalaimalar.com