

மரகதம் குமரவேலை விட எனக்கு அதிக பிரச்சனைகள் வந்தது. இருப்பினும் எனக்கு வெற்றி தந்த மக்களுக்கு நன்றி என்று சத்தியபாமா கூறினார்.
இடைத்தேர்தலில் தவெக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட சத்தியபாமா வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மரகதம் குமரவேல், சத்தியபாமா இருவரும் எம்எல்ஏக்களாக பதவியேற்றனர். அவர்கள் இருவருக்கும் சபாநாயகர் பிரபாகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து, மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்தியபாமா செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்தியபாமா சத்தியபாமா கூறியதாவது:
* மரகதம் குமரவேலை விட எனக்கு அதிக பிரச்சனைகள் வந்தது. இருப்பினும் எனக்கு வெற்றி தந்த மக்களுக்கு நன்றி.
* தாராபுரத்தில் உள்ள தண்ணீர் பிரச்சனைக்கு கண்டிப்பாக தீர்வு காண்போம்.
* எதிர்க்கட்சியினர் எங்களைப் பற்றி பொய் பிரசாரம் செய்தனர். அவதூறு பரப்பினர்.
* ஒரு பெண் என்றும் பாராமல் எங்கள் மீது தேர்தல் பிரசாரத்தில் அவதூறு பரப்பினர். பொய் பிரசாரத்தில் மன உளைச்சலுக்கு ஆளானோம்.
* பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்.
* இடைத்தேர்தலில் நாங்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை.
* திமுக, அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம், பொருள் கொடுத்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.