

மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக அடிப்படை வசதி உள்பட வளர்ச்சிக்கான அனைத்தையும் செய்து தருவேன் என்று எம்எல்ஏ மரகதம் குமரவேல் கூறினார்.
இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட சத்தியபாமா வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மரகதம் குமரவேல், சத்தியபாமா இருவரும் எம்எல்ஏக்களாக பதவியேற்றனர். அவர்கள் இருவருக்கும் சபாநாயகர் பிரபாகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து, மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்தியபாமா இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மரகதம் குமரவேல் கூறியதாவது:
* இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த அண்ணன் முதலமைச்சர் விஜய், வாக்களித்த தொகுதி மக்களுக்கும் நன்றி.
* எதிர்க்கட்சியினர் எவ்வளவு பொய் பிரசாரம் செய்தாலும் எடுபடவில்லை.
* திமுக, அதிமுக இணைந்து பல பிரச்சனைகளை ஏற்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கினர்.
* அண்ணன் முகத்தை காட்டியதால் மதுராந்தகம் தொகுதி மக்கள் அதிக வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளனர்.
* மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக அடிப்படை வசதி உள்பட வளர்ச்சிக்கான அனைத்தையும் செய்து தருவேன்.
* மதுராந்தகம் தொகுதியில் 30,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நினைத்தேன்.
* ராஜினாமா, குதிரைபேரம் என்ற குற்றச்சாட்டுகளை மக்களிடையே திணித்து பொய் பிரசாரம் செய்தனர்.
* மதுராந்தகம் தொகுதி மக்கள் எனக்கு ஹாட்ரிக் வெற்றி அளித்துள்ளனர்.
* தபால் ஓட்டு முழுவதும் பணம் கொடுத்து வாங்கி உள்ளனர் என உறுதியாக சொல்வேன்.
* முழுக்க முழுக்க தளபதி விஜய்க்காக வந்த வாக்கில் தான் நான் வெற்றி பெற்றுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.