

பணிநிரந்தரம் செய்யக் கோரி போராட்டம் நடத்திய மருத்துவப் பணியாளர்களைக் காவல்துறை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது என்று கனிமொழி கூறி உள்ளார்.
திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பணிநிரந்தரம் செய்யக் கோரி போராட்டம் நடத்திய மருத்துவப் பணியாளர்களைக் காவல்துறை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதியாகக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டு, இன்று அவற்றை நிறைவேற்றக் கோரி மக்கள் போராடினால் ஒடுக்குமுறையை ஏவி அடக்கிக் கொண்டிருக்கிறது இந்த அராஜக அரசு.
விவசாயிகள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என இந்த அரசு ஏமாற்றியவர்களின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், போராடுபவர்களைக் காவல்துறையை வைத்துக் கைது செய்தே காலத்தை ஓட்டிவிடலாம், தேர்தல் நேரத்தில் முகத்தைக் காட்டினால் மட்டும் போதும் என்கிற மிதப்பில் இருக்கிறாரா முதலமைச்சர்?
கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்; அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.