போராட்டங்களுக்கான இடமாற்றம்; பா.ஜ.க. அரசின் அச்சத்தையே வெளிக்காட்டுகிறது- எம்.பி வெங்கடேசன்

அதிகாரத்தில் இருப்போருக்கும் ஆட்சி செய்வோர்க்கும் குடிமக்களின் குரல் அவர்கள் எங்கிருந்து எழுப்பினாலும் கேட்க வேண்டும்.
Su.Venkatesan MP
Published on: 

மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான இடமாக இருந்த ஜந்தர் மந்தர் அறிவிக்கப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக, டெல்லியில் ராம்லீலா மைதானம், புராரி மைதானம் மற்றும் கிழக்கு டெல்லியில் உள்ள சிபிடி மைதானம் ஆகிய 3 இடங்கள் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான புதிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜந்தர் மந்தரில் அனுமதி இல்லை

தேர்தல் முறைக்கேடு , வாக்குதிருட்டு குளறுபடிகளை கண்டித்து தலைமை தேர்தல் அதிகாரி பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தாரில் பல்வேறு மாணவ அமைப்புகள, எதிர்கட்சி தலைவர்கள் போராடி வருகின்றனர்.

இதற்கு முன்னர் நீட் முறைக்கேடுவை கண்டித்து மத்திய கல்வி அமைச்சர் பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. ஒரே நேரத்தில் ஜந்தர் மந்தரில் லட்சகணக்கான மாணவர்கள் குவிந்ததால் ஜந்தர் மந்தரே மாணவர்களால் நிறைந்திருந்தது.இந்த சூழலில் போராடுவதற்கு இனி ஜந்தர் மந்தரில் அனுமதி கிடையாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குடிமக்கள் தங்களது போராட்ட உரிமையைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற மாற்று இடங்களை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்திருந்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக டெல்லியில் ராம்லீலா மைதானம், புராரி மைதானம் மற்றும் கிழக்கு டெல்லியில் உள்ள சிபிடி மைதானம் ஆகிய 3 இடங்கள் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான புதிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை ,போராட்டங்களுக்காக ஏற்கெனவே அறிவிக்கை செய்யப்பட்ட இடத்தை இவ்வளவு அவசரமாக மாற்றுவது பா.ஜ.க. அரசின் அச்சத்தையே வெளிக்காட்டுகிறது. என்று எம்.பி.சு.வெங்கடேசன் கண்டனஙக்ளை தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

அதிகாரத்தில் இருப்போருக்கும் ஆட்சி செய்வோர்க்கும் குடிமக்களின் குரல் அவர்கள் எங்கிருந்து எழுப்பினாலும் கேட்க வேண்டும்.ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி மக்களின் போராடும் உரிமை நசுக்கப்படுவதைக தொடர்ந்து பார்த்து வருகிறோம்.குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களில் அரசியலமைப்புச் சட்டம் ஒரு குடிமகனுக்குத் தந்திருக்கும் அனைத்து உரிமைகளையும் மோடி அரசு மறுத்து வன்முறையைக் கட்டவிழ்த்தது. கிட்டத்தட்ட டெல்லி ஒரு Police State ஆகத்தான் இருந்தது.

பாஜக அரசின் அச்சத்தையே காட்டுகிறது

ஜந்தர் மந்தரில் எழுப்பபடும் குரல்களுக்கே மதிப்பில்லை என்றால் அந்த இடத்தை வேறு எங்கு மாற்றினாலும் அதேநிலைதான் தொடரப்போகிறது என்பது தெளிவாகியுள்ளது போராட்டங்களுக்காக ஏற்கெனவே அறிவிக்கை செய்யப்பட்ட இடத்தை இவ்வளவு அவசரமாக மாற்றுவது பா.ஜ.க. அரசின் அச்சத்தையே வெளிக்காட்டுகிறது. மோடி - அமித் ஷா அரசு பொதுமக்களின் அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்கும் நாள், அத்தனை வன்முறைகளுக்கும் பொறுப்பேற்கும் நாள் விரைவில் வரும்

என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com