ஹார்முஸை திறக்க 7 நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்ற அமெரிக்கா.. போதாது என ஈரான் பதில்

ஏழு நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும்
டிரம்ப், மொஜ்தபா காமேனி
Published on: 
Summary

ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கு தங்களின் நிபந்தனைகள் சிலவற்றை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான ஈரானின் ஏழு நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் அது போதுமானதாக இல்லை என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

போதுமானதாக இல்லை

ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் செயலாளர் மொஹ்சென் ரெஸாயி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "ஈரானின் ஏழு நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது, ஆனால் அதன் பதில் போதுமானதாக இல்லை என்று நாங்கள் கருதுகிறோம். ஈரானின் ராஜதந்திரம் மாறிவிட்டது, பழைய நிலைமைக்கு திரும்புதல் இருக்காது" என்று கூறியுள்ளார்.

ஜூன் மாதம் எட்டப்பட்ட 14 அம்ச ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என்று இந்த மாதத் தொடக்கத்தில் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகேரி காலிபாஃப் கூறியிருந்தார்.

அமெரிக்கா சமீபத்தில் ஒரு மத்தியஸ்தர் மூலம் சில முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது, ஆனால் ஈரானின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்றும் காலிபாஃப் கூறினார்.

ஈரான் முன்மொழிவு

ஈரான் மீது 27 நிறுவனங்கள், ஆறு தனிநபர்கள் மற்றும் 22 கப்பல்களை இலக்காகக் கொண்டு, 'ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்' என்ற புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா அண்மையில் விதித்தது.

இந்நிலையில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு, கடந்த மாதம் ஈரான் கத்தார் மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவிடம் ஏழு நிபந்தனைகளை முன்வைத்தது.

அமெரிக்க கடற்படை முற்றுகையை நீக்குவது மற்றும் ஈரானிய எண்ணெய் விற்பனை மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது உட்பட சில நிபந்தனைகளை வாஷிங்டன் நிறைவேற்றினால் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறந்து பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கலாம் என்று ஈரான் முன்மொழிந்தது.

இதற்கிடையில், சனிக்கிழமையன்று, நவம்பர் 3 இடைக்காலத் தேர்தல் முடியும் வரை ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தாது என கடந்த வாரம் டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com