வேளாங்கண்ணி திருத்தலத்தின் சிறப்புகள்
- இந்தியாவின் புனிதமான கிறிஸ்தவ புனிதத்தலங்களில் முதன்மையானதாக இத்தலம் கருதப்படுகிறது.
- உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் வந்து செல்கிறார்கள்.
வங்காள விரிகுடா கடற்கரையில் வேளாங்கண்ணி தேவாலயம் அமைந்துள்ளது.
இந்தியாவின் புனிதமான கிறிஸ்தவ புனிதத்தலங்களில் முதன்மையானதாக இத்தலம் கருதப்படுகிறது. சென்னையில் இருந்து 350 கி.மீ. தூரத்திலும் நாகப்பட்டினத்தில் இருந்து 12 கி.மீ. தூரத்திலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
17-ம் நூற்றாண்டின்...
17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குழந்தை இயேசுவுடன் கன்னி மேரி இங்கு தோன்றினார் என்றும், அதன் பிறகு வேளாங்கண்ணி கிறிஸ்தவ சமூகத்தின் போற்றப்படும் இடமாக மாறியது என்றும் கூறப்படுகிறது. இது போப் ஆண்டவரால் புனித நகரமாக அறிவிக்கப்பட்டது. எனவே இத்தலத்துக்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் வந்து செல்கிறார்கள்.
அதிசய சக்திகள்
இங்குள்ள புனித ஆரோக்கிய மாதா அன்னைக்கு அதிசய சக்திகள் இருப்பதாக தேவாலயத்திற்கு வந்து செல்லும் பக்தர்களால் நம்பப்படுகிறது. ஜாதி, மதம், இனம் கடந்து அனைவரும் இத்தலத்திற்கு வந்து அன்னையை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.
பிரச்சினைகள் தீரும்
கல்வி, செல்வம், திருமணம், வேலை வாய்ப்பு, குழந்தையின்மை, தீராத மன கஷ்டம் மற்றும் நோய்கள் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு வந்து அன்னையை மனமுருகி வேண்டிக்கொண்டால் அவர் அருள்பாலித்து தீர்த்து வைக்கிறார் என்பது காலம் கடந்த நம்பிக்கை ஆகும். இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட அன்னையை தரிசித்துவிட்டு வீடு திரும்புங்கள். உங்கள் கவலை அனைத்தும் நீங்கி வாழ்வில் சந்தோஷம் நிறையும்.